சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

சென்னை மாநகரில் அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் அனுமதி பெறாதபேனரைஅச்சடிக்கும்அச்சகத்தின்உரிமத்தை ரத்து செய்வதுடன் அச்சகத்துக்கு சீல் வைக்கப்படும்.

 Chennai Municipal Corporation Warning

Advertisment

Advertisment

விளம்பரபதாகைகள், பேனர்கள் அச்சடிக்கும்போது அனுமதி எண், நாள், அளவு, அனுமதி கால அவகாசம் குறிப்பிட வேண்டும்.அவ்வாறு குறிப்பிடாமல் மீறி பேனர்கள் அடித்தால் குறிப்பிட்ட அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் மேலும் அச்சகத்திற்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 Chennai Municipal Corporation Warning

ஏற்கனவே நேற்று முன்தினம் சென்னை மாநகராட்சி ஒரு எச்சரிக்கை அறிக்கையை வெளிட்டியிட்டிருந்தது. அதில், சென்னையில் மாநகராட்சிக்கு சொந்தமான மரங்களில் உள்ள விளம்பர பதாகைகள், விளம்பர தட்டிகள் போன்றவற்றை குறிப்பிட்ட தனியார் நிறுவனங்கள் 10 நாட்களுக்குள் நீக்க வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சென்னை மாநகரட்சி முனிசிபல் சட்டம் 1919 ஆம் ஆண்டு 326 ஐ பிரிவுப்படி 25 ஆயிரம் அபராதமும்,3 ஆண்டுகள் சிறையும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.