'' I'll talk tomorrow ... '' - Sasikala interview!

கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக இதுவரை 217 பேரிடம் தனிப்படை விசாரணை நடத்தியுள்ளநிலையில் இன்று சசிகலாவிடம் விசாரணை நடைபெற்றது.கொடநாடு எஸ்டேட்டின் உரிமையாளர் என்ற அடிப்படையில் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

Advertisment

இன்று சுமார் 6 மணிநேரம் இந்த விசாரணையானது நடைபெற்றது. இந்நிலையில் இது சம்பந்தமாக நாளையும் சசிகலாவிடம் தனிப்படையின் விசாரணை தொடரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று சசிகலாவிடம் நடைபெற்ற விசாரணை எழுத்துபூர்வமாகவும், வீடியோ வாயிலாகவும் பதிவு செய்யப்பட்டதாகதகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ''நாளையும் விசாரணை நடைபெற இருப்பதால் நடைபெற்ற விசாரணை குறித்து நாளை பேசுகிறேன். என்னென்ன கேள்விகள், எத்தனை கேள்விகள் கேட்டார்கள் என சொல்ல முடியாது. ஆனால் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தேன்''என்றார்.