Published on 24/07/2022 | Edited on 24/07/2022

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, நாளை (25/07/2022) மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்கவுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, தர்மசாலா கோயில் நிர்வாக அறங்காவலர் வீரேந்திர ஹெக்டே, பிரபல திரைக்கதை எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் ஆகியோர் மாநிலங்களவை நியமன எம்.பி.களாக அண்மையில் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த திங்கள்கிழமை அன்று நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் போது, நியமன உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டோர், மாநிலங்களவையில் பதவியேற்றுக் கொண்டனர்.
ஆனால், அன்றைய தினம் இளையராஜா பதவியேற்காத நிலையில், நாளை (25/07/2022) மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்க உள்ளார். இதற்காக, டெல்லி சென்ற இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.