Advertisment

"இளையராஜா பின்வாங்க மாட்டார்"- கங்கை அமரன் பேட்டி!

publive-image

Advertisment

ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அது தற்போது சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள முன்னுரையில், "பிரதமர் நரேந்திர மோடியின் "மேக் இன் இந்தியா" திட்டம் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. நாட்டில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்றவை உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சமூக நீதியைப் பொறுத்தவரை, பல்வேறு சட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி இருக்கிறார். முத்தலாக் சட்டம், 'பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் - பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' என்ற திட்டமும், பெண்களின் திருமண வயதை உயர்த்த முடிவெடுத்ததும் பெண் சமுதாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும். இதுபோன்ற நரேந்திர மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளைக் கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார். அம்பேத்கரும், நரேந்திர மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜாவின் இந்த முன்னுரை தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிடுவது தவறானது என்று கூறி சமூக வலைதளங்களில் இளையராஜாவின் பேச்சுக்குப் பலரும் கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். இதே போன்ற இளையராஜாவின் கருத்திற்கு ஆதரவாகவும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரர் கங்கைஅமரன், "அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என இளையராஜா கூறினார். தனக்கு எதிரான விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதாகவும், என்னிடம் இளையராஜா கூறினார். மற்றவர்கள் எப்படி கருத்துக் கூறுகிறார்களோ, அதேபோல் தான் கருத்தைக் கூறினேன் என்றார் இளையராஜா. தான் பதவியை வாங்குவதற்காக மோடியை புகழவில்லை; தான் கட்சிக்காரரும் இல்லை என்றார் இளையராஜா. அம்பேத்கரையும் பிடிக்கும், மோடியையும் பிடிக்கும்; அதனால் ஒப்பிட்டு பேசினேன் என்றார் இளையராஜா." இவ்வாறு கங்கைஅமரன் கூறினார்.

ilayaraja pressmeet
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe