'கமல் 60’ எனும் பிரம்மாண்டமான விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். விழாவின் மேடைக்கு இசைஞானி இளையராஜாவை வரவேற்ற பொழுது கண்கலங்கினார் கமலஹாசன். மேடைக்கு வந்த இளையராஜா முதலில் 'ஜனனி ஜனனி' என்ற பாடலிலிருந்து ஆரம்பித்தார். அதன் பின்பு இது கூத்து நடக்கும் மேடை இங்கு முதல் வணக்கம் யாருக்கு வைக்கணும் தெரியுமா என்றஅவர் 'முந்தி முந்தி விநாயகனே' என்றபாடலைபாடினார். பின்னர் கருமேட்டு கருவாயன் படத்திலிருந்து'கதை கேளு கதை கேளு' என்ற பாடலையும் கமல்ஹாசனுக்கு ஏற்றவாறு மாற்றிப் பாடினார். அந்த பாடலின் வரிகள்பெங்களூருவில் உள்ள தாஜ் ஹோட்டலில் எழுதியதாக அவர் குறிப்பிட்டார்.