Skip to main content

"இளையராஜா 5 பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர்; ஆனால் அதை விட.." - உடைத்து பேசிய அமீர்!

Published on 25/04/2022 | Edited on 25/04/2022

 

ோே்

 

1997-ஆம் ஆண்டு மஜித் மஜிதி இயக்கத்தில் வெளிவந்த படம் ‘சில்ரன் ஆஃப் ஹெவன்'. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த அண்ணன் தங்கை பள்ளியில் படித்து வருகிறார்கள், இருவரும் ஒரே ஷூவை தான் பயன்படுத்துகிறார்கள். இந்த கதைக்களத்தைக் கொண்டு இருவருக்கும் இடையே உள்ள அன்பு மற்றும் அங்கு நடக்கும் சமுதாய ஏற்றத்தாழ்வு போன்ற பல்வேறு நிகழ்வுகளை மிக அழுத்தமாகச் சொன்ன இப்படம் 1998-ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் அந்த ஆண்டிற்கான சிறந்த சர்வதேச திரைப்படத்தின் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது. உலகம் முழுவதும் புகழ் பெற்ற இப்படம் 'அக்கா குருவி' என்ற தலைப்பில் தமிழில் ரீமேக் ஆகி வந்தது.

 

இந்நிலையில் மே மாதம் 6-ஆம் தேதி 'அக்கா குருவி' படம் திரையரங்கில் வெளியாகிறது. 'மிருகம்', 'சிந்து சமவெளி' படத்தை இயக்கிய சாமி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்புரையாற்றிய அமீர் இளையராஜா குறித்துப் பேசினார். இதுதொடர்பாக அமீர் பேசியதாவது, " இளையராஜாவின் இசை, மொழி தெரியாதவர்களுக்குக் கூட பிடிக்கும் ஆற்றல் உடையது. அவருக்கு ஒரு பாரத ரத்னா விருது மட்டுமல்ல, 5 பாரத ரத்னா விருதுக்குத் தகுதியானவர். ஆனால், மொழி தெரியாதவர்கள் பாராட்டுவதை விட ஜனாதிபதி பதவியோ வேறு பதவியோ பெரியது இல்லை. இளையராஜா இங்கு இருந்தாலும் இதே கருத்தைக் கூறியிருப்பேன்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்