இளவரசிக்கு கரோனா பரிசோதனை!

ilavarasi coronavirus rtpcr testing prison department

கரோனா பரிசோதனையில் சசிகலாவுக்கு தொற்று உறுதியான நிலையில், பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சசிகலாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையையும் வெளியிட்டது. அதில், சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருப்பதாகவும், நுரையீரலில் தொற்று அதிகமாகஇருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இருப்பினும் அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள இளவரசிக்கும் கரோனா பரிசோதனைச் செய்யப்பட்டதாக சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆர்.டி.பி.சி.ஆர். முடிவுக்காகக் காத்திருக்கும் நிலையில், இளவரசியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சி.டி.ஸ்கேன் எடுக்கவும் சிறைத்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

coronavirus Ilavarasi
இதையும் படியுங்கள்
Subscribe