Advertisment

சசிகலாவுக்கு தொடரும் அதிமுக வரவேற்பு போஸ்டர்கள்... இன்று விடுதலையாகும் இளவரசி!

 ilavarasi to be released today ... AIADMK welcome posters for Sasikala!

Advertisment

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனைநிறைவடைந்ததை அடுத்து,கடந்த 27ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இருப்பினும் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தநிலையில், கடந்தஞாயற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா,பெங்களூருபுறநகர் பகுதியான தேவனஹல்லி அருகே உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.வரும் பிப்.7 ஆம் தேதி சசிகலா வருவார் எனதெரிவித்திருந்த நிலையில், பிப்.7 ஆம் தேதிக்குப் பதில் பிப். 8 ஆம் தேதி காலை9 மணிக்குத் தமிழகம் வருவார் எனநேற்று (04.02.2021) டி.டி.வி.தினகரன் தெரிவித்திருந்தார்.

 ilavarasi to be released today ... AIADMK welcome posters for Sasikala!

சசிகலா விடுதலை செய்திகள் வெளியான தொடக்கத்திலேயே அதிமுக தொண்டர்கள் சிலர், சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டிய நிலையில்கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இருப்பினும்தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயன்காரன்புலத்தில், சசிகலாவை வரவேற்று அதிமுக தொண்டர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

Advertisment

இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சசிகலாவுடன் சிறை தண்டனை பெற்ற சசிகலாவின் உறவினரான இளவரசி பரப்பன அக்ரஹாரா ஜெயிலில் இருந்து இன்று காலை11மணிக்கு விடுதலையாக இருக்கிறார்.

Ilavarasi Poster admk sasikala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe