சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இளமதி போலீசில்ஆஜராகியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் இளமதி (23). இவரும், அந்தியூர் அருகே உள்ள கவுந்தப்பாடியைச் சேர்ந்த செல்வன் (26) என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். அதனால் பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

Advertisment

mettur

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதையடுத்து, கடந்த இரு நாள்களுக்கு முன்பு காதலர்கள் வீட்டைவிட்டு வெளியேறினர். அவர்கள், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரைச் சேர்ந்த திராவிடர் விடுதலைக் கழக பிரமுகர் ஈஸ்வரன் என்பவரிடம் தஞ்சம் அடைந்தனர். காதல் ஜோடிக்கு அவர் சீர்திருத்த முறையில் சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த இளமதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அடியாட்கள் என முப்பதுக்கும் மேற்பட்டோர் கார்களில் திங்கள்கிழமை (மார்ச் 9) இரவு கொளத்தூர் வந்து இளமதிக்கு வேறு சமூகத்தைசேர்ந்த வாலிபருடன் திருமணம் செய்து வைத்த ஆத்திரத்தில் அந்த கும்பல் ஈஸ்வரன் மற்றும் செல்வன் ஆகியோரை கடத்திச்சென்று காவிரி கரையில் வைத்து தாக்கியுள்ளது. கொளத்தூர் காவல்துறையினர் அவர்கள் இருவரையும் மார்ச் 10ம் தேதி காலையில் பத்திரமாக மீட்டனர். இதற்கிடையே அந்த கும்பல் இளமதியை கடத்தச்சென்றதாக கூறப்பட்டது.

Advertisment

கடத்தப்பட்டதாக புகாரளிக்கப்பட்ட நிலையில்சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டஇளமதிமேட்டூர்அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கறிஞர் சரவணன் என்பவருடன் ஆஜராகியுள்ளார்.