Advertisment

இசை நிகழ்ச்சி மேடையில் கோபப்பட்ட இளையராஜா:வைரல் வீடியோ

நேற்றைய தினம் இளையராஜா பிறந்த நாளை முன்னிட்டு ஈவிபி பிலிம் சிட்டியில் இசை நிகழ்ச்சிநடந்தது.கமல்,எஸ்.பி.பாலசுப்ரமணியன்,விஜய்சேதுபதி,மனோ,சித்ரா,ஜேசுதாஸ்,விஜய் ஆண்டனி ஆகியோர் கலந்து கொண்டனர்.இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது செக்யூரிட்டி ஒருவர் மேடைக்கு வருவதைப் பார்த்த இளையராஜா கோபம் அடைந்தார். நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது இப்படி வந்து இடையூறு செய்யலாமா என்று இளையராஜா கோபமாக கேட்டார்.

Advertisment

அதற்கு அந்த செக்யூரிட்டி தாகமாக இருக்கிறது என்றார்கள் தண்ணீர் கொண்டு வந்தேன் என்று பரிதாபமாக பதில் அளித்தார்.அந்த செக்யூரிட்டி சொன்ன விளக்கத்தை இளையராஜா ஏற்கவில்லை. இதையடுத்து அவர் இளையராஜாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றார். இதையடுத்து இசை நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்களையும் இளையராஜா கடிந்து கொண்டார். ரூ. 500, ரூ. 1000 கொடுத்து டிக்கெட் வாங்கிவிட்டு ரூ. 10,000 இருக்கையில் அமர்வது சரியா என்று கேட்டார்.இசை நிகழ்ச்சியில் இளையராஜா கோபப்பட்டது எல்லாரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.இசை நிகழ்ச்சி மேடையில் இளையராஜா கோபப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

function birthday music director tamil music ilayaraja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe