Advertisment

'மனசு'தான் ஒரு மனிதனுக்கு ராகம் - மாணவர்கள் மத்தியில் இளையராஜா

Ilaiyaraaja

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பில் இசைஞானி இளையராஜாவிற்கு 75-வது பிறந்தநாள் விழா பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் முருகேசன் தலைமை வகித்தார். விழாவில் இளையராஜா கலந்து கொண்டு அரங்கின் மத்தியில் சென்று மாணவ மாணவிகளுடன் இணைந்து பிறந்த நாள் கேக்கை வெட்டி பரவசப்படுத்தினர். அப்போது மாணவ மாணவிகள் இளையராஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கைதட்டி வரவேற்றனர்.

Advertisment

இதனை தொடர்ந்து அவர் பேசுகையில், இந்த அரங்கிற்கு நான் இரண்டாவது முறையாக வந்துள்ளேன். முதல்முறையாக 1994-ல் எனக்கு இந்த அரங்கில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அதன்பிறகு இந்த விழாவிற்கு வந்துள்ளேன். இசை, பாடல், காற்றில் பரவும் அசுத்தங்களை சுத்தம் செய்கிறது. நாம் எல்லா இசைகளுக்கும் தலையாட்டுவது இல்லை. பக்குவப்பட்ட இதயகுரலிலிருந்து வரும் இசைக்கு மட்டுமே தலையைட்டுகிறோம். இதனால் மனிதனின் கவலையை சாந்தப்படுத்த முடிகிறது என்று பல்வேறு தரப்பு மக்கள் என்னிடம் கூறியுள்ளனர். இசையால் வார்த்தைகள் அர்த்தமுள்ளதாகவும் உணர்ச்சிகளை தூண்டும் விதமாகவும் உள்ளது என்றார்.

Advertisment

Ilaiyaraaja

அப்போது மாணவர்கள் அவரது பேச்சை கைதட்டி விசிலடித்து வரவேற்றனர். அப்போது அவர் பேச்சை நிறுத்திவிட்டு, விசிலடிக்கும் இடமில்லை. இது பல்கலைக்கழகம். கோயிலுக்கும் மேலே உள்ள இடத்தில் நான் நானாக உள்ளேன். நீங்க நீங்களாக இருங்கள் என்று மாணவர்களை அறிவுரை வழங்கி பேச்சை தொடங்கினார்.

இதனை தொடர்ந்து அவர் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், அடிக்கிற அலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம், அதேபோல் மாணவர்களும் ஒவ்வொரும் ஒவ்வொருவிதமாணவர்கள் நீரோடைகள் சென்று பசுமையை உருவாக்குவது போல் மாணவர்கள் செல்லும் இடங்களெல்லாம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைய வேண்டும் என வாழ்த்தினார்.

Ilaiyaraaja

எனக்கு இசை பற்றி ஒன்றும் தெரியாது. அதனால் தொடர்ந்து இசைத்துக் கொண்டே இருக்கிறேன் என்று அவர் முன் இருந்த ஹார்மொனியம் பெட்டிமீது சத்தியம் செய்து மாணவர்களிடம் கூறினார். மேலும் இசை தான் என்னை தேர்ந்தெடுத்துள்ளது. சாதனை என்பது அதுவாக நடக்கக் கூடியது. நான் சொல்லப்படாத சாதனைகள் பல உள்ளது. மனசு தான் ஒரு மனிதனுக்கு ராகம், இசைக்கலைஞர்கள் உருவாக்கப்படுவதில்லை பிறக்கிறார்கள் என்றார்.

முன்னதாக இளையராஜாவிற்கு மாலை அணிவித்து தலையில் கிரீடம் அணிவித்தனர் அப்போது அவர் தலைக்கு கிரீடம் வேண்டாம் என்று மறுத்தார். பின்னர் மாணவர்களிடம் தலைக்கணம் இருக்கக்கூடாது என்று செய்கை மூலம் காட்டினார் இதனை மாணவர்கள் கை தட்டி வரவேற்றனர்.

அதேபோல் துணைவேந்தர் முருகேசன் பேசுகையில், இளையராஜாவிற்கு 75-ம் ஆண்டு பிறந்தநாள் விழா நாளில் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 90-வது ஆண்டின் தொடக்கநாள் இன்று எனவே பல்கலைக்கழக இசைத்துறையில் இளையராஜா பெயரில் இருக்கை ஒன்று அமைக்க பல்கலைக்கழகத்தில் இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்தி அதில் வரும் வருமானத்தை இருக்கை அமைக்க அனுமதிக்க வேண்டும். இந்த இருக்கையின் மூலம் இசைதுறையில் தனித்தன்மை வகிக்கும் மாணவர்களுக்கும் அறிஞர்களுக்கும் பாராட்டு பட்டயம் வழங்கி சிறபிக்கப்படும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை இளையராஜா ஏற்றுக்கொண்டு 90-வது ஆண்டு முடிவதற்குள் பல்கலைக்கழகத்தில் இசை நிகழ்ச்சி நடத்த ஒப்புதல் அளித்துள்ளார். இதனை மாணவர்கள் பெருத்த கரகோஷம் எழுப்பி வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதனைதொடர்ந்து பல்கலைக்கழக பதிவாளர் ரவிச்சந்திரன் இளையராஜாவின் சாதனைகள் குறித்து பேசினார்.

Annamalai University Speech Ilaiyaraaja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe