Advertisment

தமிழ்நாடு ஆளுநரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இல.கணேசன்!

Ila Ganesan who met the Governor of Tamil Nadu in person and congratulated him!

மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து, பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளை இல.கணேசன் ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலையிடம் வழங்கினார்.

Advertisment

இந்த நிலையில், காஞ்சி சங்கரமட பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமியிடம் ஆசிபெற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இல.கணேசன், "ஆகஸ்ட் 27- ஆம் தேதி அன்று மணிப்பூர் மாநில ஆளுநராகப் பதவியேற்க உள்ளேன்" என்றார்.

Advertisment

அதைத் தொடர்ந்து, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்த இல.கணேசன் வாழ்த்துபெற்றார்.

ganesan governor Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe