சென்னை ஐஐடி கல்லூரியில் படித்து வந்த கேரள மாணவி ஃபாத்திமா லத்தீஃப் கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தற்கொலைக்கு மூன்று ஆசிரியர்கள்தான் காரணம் என தன்னுடைய மொபைலில் நோட்டும் செய்திருக்கிறார். இந்நிலையில் மாணவி குறிப்பிட்டுள்ள மூன்று பேராசிரியர்களில் ஒருவர் சுதர்ஷன் பத்மநாபன். அவர் அறப்போர் இயக்கத்தை சேர்ந்தவர் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வந்தது.

Advertisment

fathima latheef

இந்நிலையில் இதை விளக்கும் விதமாக அறப்போர் இயக்கம் ஜெயராம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நேற்று முதல் ஐஐடி மாணவி தற்கொலை விஷயத்தில் 3 பேராசிரியர்கள் மீது குற்றச்சாட்டு உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அதில் சுதர்ஷன் பத்மநாபன் என்னும் பேராசிரியர் அறப்போர் இயக்க நிர்வாகி என்று ஒரு செய்தி இணையதளத்தில் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. மேலும் சுதர்ஷன் பத்மநாபன் அறப்போர் இயக்க அலுவலகத்தில் நடந்த ஒரு பத்திரிகை சந்திப்பில் பங்கெடுத்த புகைப்படமும் பரப்பப்பட்டு வருகிறது. சுதர்ஷன் பத்மநாபன் அறப்போர் இயக்க நிர்வாகி என்பதில் துளி அளவும் உண்மை கிடையாது. அறப்போர் இயக்கம் தேர்தல் நேரங்களில் ஜனநாயக சீர்திருத்த அமைப்புடன் (Association for Democratic Reforms) சேர்ந்து அனைத்து வேட்பாளர்களும் தங்கள் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மற்றும் குற்ற பின்னணி குறித்து வெளியிடுவோம். எனவே அவர் ஜனநாயக சீர்திருத்த அமைப்பின் பிரதிநிதியாக பத்திரிகை சந்திப்பில் கலந்து கொண்டார். மேலும் அறப்போரின் சில பொது நிகழ்வுகளுக்கும் அவர் வந்துள்ளார். இது அனைத்தும் பத்திரிகை நண்பர்களுக்கும் தெரியும். எனவே சுதர்ஷன் அறப்போரின் நிர்வாகி அல்லது முக்கிய நிர்வாகி என்பது உண்மைக்கு புறம்பானது.

Advertisment

இந்த நேரத்தில் நாம் அனைவரும் இறந்த மாணவியின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க கோருவது அவசியம். காவல்துறை நியாயமான மற்றும் விரைவான விசாரணை நடத்தி அந்த குடும்பத்திற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே அறப்போரின் நிலைப்பாடு.