Advertisment

“ஐ.ஐ.டி. என்பது தொடர்ந்து ஒரு மர்ம தீவாகவே இருக்கிறது”-செல்வப்பெருந்தகை!

சென்னை ஐ.ஐ.டி. நிறுவன படுகொலை செய்யப்பட்ட மாணவி பாத்திமா லத்தீப்பிற்கு நீதி வேண்டி, வள்ளுவர் கோட்டத்தில் மாணவர்களின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதனை கேம்பஸ் ஃப்ரண்ட் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது தலைமை தாங்கினார். இதில் அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கண்டன உரை ஆற்றினர். அதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisment

அப்போது அவர் பேசியதாவது, “மன உளைச்சல் ஏற்படுத்தியதால் பாத்திமா லத்தீப் என்ற கேரள மாணவி நிறுவன படுகொலை செய்யப்பட்டு இறந்து போனார். அதை தொடர்ந்து ஐ.ஐ.டியில் நடந்த பல படுகொலைகள் வெளியே வந்தது நாம் அறிந்த விஷயம் தான். இந்த விஷயத்தில் நீதி வேண்டும் என்று அன்றே தமிழகத்தில் ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராடிய காரணத்தால் இன்று கோர்ட்டில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அதில் முழு முழுக்க அப்பட்டமான பொய் சிபிஐயால் புனையப்பட்டிருக்கிறது என்பது நாமெல்லாம் தெரிஞ்ச ஒன்று தான். சுதர்ஷன பத்மநாபன் உள்ளிட்ட பேராசிரியர்கள் தான் எனது மரணத்திற்கு காரணம் என சூசைட் நோட்ஸ் இருந்தும் இன்று பாத்திமாவிற்கு நீதி மறுக்கப்பட்டிருக்கிறது.

Advertisment

இதே போன்று சென்னை ஐ.ஐ.டியில் 2019ல் மட்டும் 6 மாணவர்கள் இறந்திருக்காங்க. இதுவரையில் பத்து வருடத்தில் 14 மாணவர்கள் இறந்திருக்காங்க. ஐ.ஐ.டி என்பது தொடர்ந்து ஒரு மர்ம தீவாகவும், உயர் ஜாதியினர் ஆதிக்கம் இருக்கக்கூடிய ஒரு இடமாகவே இருக்கிறது என்பது சிபிஐ அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கிறது. முழுக்க முழுக்க அப்பட்டமாக பொய் சொல்லப்பட்ட இந்த வழக்கின் விசாரணையை ஒரு போதும்மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இந்த விஷயத்தில் நீதி கிடைக்கிற வரைக்கும் மிகப் பெரிய ஒரு மக்கள் மாணவர்கள் திரள் போராட்டத்தை முன்னெடுப்போம் சொன்னது போல இன்று இங்கு தொடங்கியிருக்கிறோம். அதனால் பாத்திமா லத்தீப்பிற்கு நீதி கிடைக்கிற வரைக்கும் இந்த போராட்டம் தொடரும். அதே போல ஐ.ஐ.டியில் எத்தனை மாணவர்கள் இறந்தார்களோ அத்தனை மாணவர்களின் இறப்பில் உள்ள மர்மங்களை வெளிகொண்டு வருவோம்” எனத்தெரிவித்தார்.

Chennai congress iit madras
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe