சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட கோரிய வழக்கில் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

 IIT incident! Postponement of verdict of CBI transfer case

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாரயணன், சேசஷாயி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது அரசு தரப்பில், பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பான வழக்கு கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் இருந்து, மத்திய குற்றப்பிரிவுக்கு விசாரணை மாற்றப்பட்டிருக்கிறது. மத்திய குற்றப்பிரிவில், கூடுதல் ஆணையர் ஈஸ்வரன் கண்காணிப்பில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. சிபிஐ இலாகாவில் பணியாற்றிய அதிகாரிகளே விசாரணையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் வழக்கு விசாரணை என்பது ஆரம்பக்கட்ட நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.