Advertisment

ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு... 3 பேராசிரியர்களிடம் மத்திய குற்றப்பிரிவு விசாரணை!

சென்னை ஐஐடியில் பாத்திமா லத்தீப் என்ற கேரளத்தைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவி தற்கொலை வழக்கில் 3 பேராசிரியர்களுக்கு தொடர்பிருப்பதாக எழுந்த வழக்கு மத்திய குற்றப் பிரிவு சிறப்பு விசாரணை குழுவிற்கு மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக வியாழக்கிழமையில் இருந்து வெள்ளி, சனி, ஞாயிறு என இந்த நான்கு நாட்களும் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.

Advertisment

IIT incident... central Criminal Investigation into 3 Professors!

மூன்று நாட்கள் நேரடியாக ஐஐடி வளாகத்தில் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இன்றைய தினம் சம்பந்தப்பட்ட அந்த 3 பேராசிரியர்களும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை. இந்தநிலையில்விசாரணையானது இன்று மாலை 3 மணியில் இருந்தே ஐஐடி வளாகத்தில் வைத்து விருந்தினர் விடுதியில் அந்த மூன்று பேராசிரியர்களிடமும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

நேரடியாக விசாரணை செய்வதற்காகதான் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அங்கே சென்று விசாரணை நடத்துவதற்கு காரணம் இந்த வழக்கில் பல்வேறு தரப்பிலிருந்து வரகேகூடிய அழுத்தம் காரணமாகவே இந்த விசாரணை மிக ரகசியமாக இருக்கவேண்டும் என்பதற்காக அவ்வாறு நடத்தப்படுவதாக போலீசார் தரப்பிலிருந்து தகவல்கள் வந்துள்ளது.

Advertisment

IIT incident... central Criminal Investigation into 3 Professors!

அதோடு மட்டுமல்லாமல் மூன்று நாட்களுக்கு முன்பே விசாரணை நடத்தி இருந்தாலும்கூட தற்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பேராசிரியர்களிடம் இருந்துமுக்கியமான தரவுகள் பெறப்பட்டிருப்பதாகவும், பலதரப்பு விசாரணையில் பெறப்பட்ட தகவல்கள், மாணவியின் தந்தையிடம் பெறப்பட்ட வாக்குமூலம், மாணவியின் செல்போனை தடயவியல் துறைக்கு அனுப்பியிருந்தார்கள். அதிலிருந்து முதல்கட்டமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தற்பொழுதுவரை 3 பேரிடம் ஐஐடி வளாகத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

Professor Investigation police commit suicide iit
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe