Advertisment

மாணவி பாத்திமா தற்கொலையில் நீதி கேட்டு ஐஐடி முற்றுகை

f

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப், சென்னை ஐஐடியில் முதலமாண்டு முதுகலை படிப்பு படித்து வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisment

தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், மாணவியின் இறுதிச் சடங்குகள் முடிந்தது. இதன் பின்னர், மாணவியின் செல்போனை ஆராய்ந்த போது அதில், தனது தற்கொலைக்கு உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் என்பவர் தான் காரணம் என மாணவி செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார்.

Advertisment

அந்த செல்போன் பதிவில், மேலும் இரண்டு பேராசிரியர்கள் தன்னை துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து மாணவியின் தற்கொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மாலையில் கேம்பஸ் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர், மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு ஐஐடி-ஐ முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

iit
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe