தலையில் டிவி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு!!

Iincident in chennai

சென்னை சேலையூரில்3 வயது குழந்தை மீது டிவி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சேலையூர் அகரம் பகுதியில் ஒரு வீட்டில் செல்போன் சார்ஜ் இடப்பட்டு அலமாரியில் வைக்கப்பட்டிருந்தது. அதே அலமாரியில் டிவியும் வைக்கப்பட்டிருந்தது. வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சார்ஜ் இடப்பட்டிருந்த செல்போனுக்கு அழைப்பு வர 3 வயது குழந்தையான கவியரசு ஓடிச்சென்று செல்போனை எடுக்க முற்பட்டுள்ளார்.

அப்போது சார்ஜர் வயரில்மாட்டியிருந்த டிவி, செல்போனை எடுக்க குழந்தை இழுத்தபொழுதுடிவி குழந்தை கவியரசு மீது விழுந்துள்ளது. சத்தம்கேட்டு வெளியில் இருந்த குழந்தையின் தந்தை அலறியடித்து ஓடிவந்து கவியரசுவைமீட்டுஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் மருத்துவர்கள் வரும் வழியிலேயே குழந்தை இறந்ததாக தெரிவித்தனர். தற்போது உயிரிழந்த 3 வயது குழந்தை கவியரசுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனையில்வைக்கப்பட்டுள்ளது. டிவி மேலே விழுந்து குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

accident baby Chennai
இதையும் படியுங்கள்
Subscribe