Advertisment

தமிழகப் பகுதிக்குள் ஊடுருவி பெயர்ப்பலகை நட்டிருக்கும் கேரளாவை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கும் அலட்சியம்! வேல்முருகன் கண்டனம்

thalur

தமிழினத்திற்கு தொடர்ந்து துரோகத்தையே செய்துவருகிறது இந்த அரசு என்று குற்றம்சாட்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. இது குறித்து அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

Advertisment

’’காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்கச் சொன்னது உச்ச நீதிமன்றம். அதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. அதன்படி அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் பிரதமரை சந்தித்து வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் பிரதமர் தன்னை சந்திக்க நேரம் ஒதுக்க மறுத்து, நீர்வளத்துறை செயலரைப் பாருங்கள் என்று தட்டிக்கழித்துவிட்டார்.

Advertisment

இதற்கான அர்த்தம் வெளிப்படை. அதாவது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம் என்பதுதான். அதை உறுதி செய்யும் விதமாகவே நீர்வளத்துறை செயலர், ”காவிரி நீர் பகிர்வுக்கான திட்டத்தைத்தான் உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறதே தவிர, காவிரி மேலாண்மை வாரியம்தான் அமைக்க வேண்டும் என்று சொல்லவில்லை” என்கிறார்.

அப்படியென்றால் நாம் என்ன செய்திருக்க வேண்டும்? மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இனி என்ன செய்வது என்று தீர்மானித்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாமல், அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு முன் நின்றுகொண்டு இன்று 14ஆவது நாளாக ”காவிரி மேலாண்மை வாரியத்தை அமை” என்று கோரிக்கை முழக்கமிட்டு வருகிறார்கள்.

இதில் ஏதாவது அர்த்தம் உள்ளதா? தமிழ் மக்களை ஏமாற்றவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடி அரசுக்கு வலு சேர்க்கவும்தான் இந்த நாடகம்.

நீலகிரியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மூன்று மாநில எல்லைப் பகுதியான நம் தாளூர் பகுதியில் 2 கிலோமீட்டர் தூரம் உள்ளே வந்து அந்த இடம் தங்கள் பகுதி என கேரளா மலையாளத்தில் பெயர்ப்பலகை நட்டிருக்கிறது. பல முறை கேரளாவைக் கண்டித்து அப்பகுதி மக்கள் போராடியும் இப்படிச் செய்திருக்கிறது. ஆனால் அதிமுக அரசு இதைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாகவே இருக்கிறது.

இதையெல்லாம் பார்க்கும்போது தமிழினத்திற்கு ஏற்பட்ட தலைக்குனிவு தான் இந்த ஈபிஎஸ்-ஓபிஎஸ் அரசு என்பது உறுதியாகிறது. ஆக தமிழினத்திற்கு தொடர்ந்து துரோகத்தையே செய்துகொண்டிருக்கிறது இந்த அரசு என்று குற்றம்சாட்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

area Condemned ignorance Kerala missing Tamil Nadu unnoticed velmurugan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe