'Ignorance ...'-Governor of Tamil Nadu going to Delhi?

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

நீட் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் அனுமதியளிக்காததால் சட்டமன்றத்தின் மாண்பையும் தமிழக மக்களையும் மதிக்கவில்லை என்று கூறி தமிழக அரசு தமிழ் புத்தாண்டிற்காக ஆளுநர் கொடுத்திருந்த தேநீர் விருந்தைப்புறக்கணித்திருந்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இன்று தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கர விழாவில் பங்கேற்பதற்கான யாத்திரையை துவக்கி வைப்பதற்காக மயிலாடுதுறை அடுத்துள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று வந்திருந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இயக்கத்தினரும், அரசியல் கட்சிகளும் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது ஆளுநர் வாகனத்தின் மீது கற்கள், கொடிகள் வீசப்பட்டதாக தமிழக எதிர்க்கட்சியானஅதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.