ஐஜி பொன்மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பொறுப்பிற்கு வந்த பிறகு தமிழகத்தில் காணாமல் போன சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

தஞ்சை பெரிய கோயிலில் இருந்த ராஜராஜ சோழன் சிலை உள்பட சில சிலைகள் 60 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டுள்ள நிலையில் குஷராத் சாராபாய் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்டு வந்தார். ராஜராஜன் சிலை மீட்கப்பட்ட போது சோழமண்டலமே மகிழ்ச்சியில் இருந்தது.

Advertisment

ig

அதன் பிறகும் பல சிலைகள் கண்டறியப்பட்ட நிலையில் சிலை கடத்தலுக்கு பின்னால் அரசியலும், அரசியல்வாதிகளும் இருப்பதால் இந்த வழக்குகளை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் சிபிஐ வழக்கு விசாரனைக்கு வர மறுத்துவிட்ட நிலையில் பொன் மாணிக்கவேல் குழு சென்னையில் கடத்தல் சிலைகளின் புதையல்களாக மீட்டனர்.

அதன் தொடர்ச்சியாக தஞ்சை பெரிய கோயிலில் இருந்து மேலும் பல சிலைகள் காணாமல் போய் இருப்பதால் தற்போது கிடைத்துள்ள சிலைகளில் தஞ்சை சிலைகள் இருக்கலாம் என்று 30 பேர்கள் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆய்வின் போது போலிசார் உடன் இருந்தனர்.

Advertisment

மேலும் அவர் வெளியில் வந்த பிறகு தான் எதற்காண ஆய்வு என்பது தெரிய வரும். பொன் சிலைகளுடன் இந்திரன் போன்ற கற்சிலைகளும் காணாமல் போய் உள்ளதால் அவற்றையும் கண்டுபிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் விருப்பம் தெரிவித்தனர்.

இதனை அடுத்து தற்போது1000 வருடம் பழமையானநடராஜர் உட்பட 10-க்கும் மேற்பட்ட சிலைகள் களவாடப்பட்டு அதற்கு பதிலாகபோலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.