Advertisment

அந்த சிலை தொன்மையானது அல்ல... அது வெறும் பித்தளை சிலை... 

இன்றும் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் மீது புகாரளிக்கஏடிஎஸ்பி இளங்கோவன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்தனர். புகாரளித்தபின்செய்தியாளர்களை சந்தித்தஏடிஎஸ்பி இளங்கோவன்இந்த சிலைகடத்தல் வழக்குகளில் முறைகேடாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. அதுகுறித்துதான் இன்றும் புகாரளிக்க வந்துள்ளோம் எனக்கூறினார்.

Advertisment

மேலும் காவல்துறை அதிகாரிகளுடன் இருவர் வந்தனர். அவர்களில் ஒருவரான தீனதயாளன் அந்த சிலையை நான்தான் வைத்திருந்தேன். அது வெறும் பித்தளை சிலை. அது தொன்மையானது அல்ல 5 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட சிலை. எனது கஷ்டம் காரணமாக அதை நான் பழைய கடையில் விற்க முயன்றேன். அப்போது ஒரு இளைஞர் அதை நான் வாங்கிக்கொள்கிறேன் என்றார். அவரிடம் கொடுத்துவிட்டேன். எனக்கூறினார்.

அவரைத்தொடர்ந்து பேசிய இன்னொருவரான சக்திவேல், மணி என்பவர் என் வீட்டிலிருந்த சிலையை சாலைக்கு எடுத்து வரக் கூறினார். கார் மூலமாக எங்களை வந்து பிடித்தார்கள் எனக்கூறியதெல்லாம் சும்மாதான். மணி என்பவர் காவல் அதிகாரி கிடையாது, போலிஸ் இன்ஃபார்மர். சிலையை நான் விற்கத்தான் வந்தேன். அந்த சிலையை வெறும் 10,000க்குதான் விற்க வந்தேன். நான் அதை திருடவில்லை. நீதிபதிகள் முன் இதைக் கூறினீர்களா என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு அப்படி சொல்லவிடவில்லை. அப்படி நாங்கள் சொல்லவில்லை எனக் கூறினார்.

complaint statue Ponmanikavel
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe