Advertisment

30 ஆயிரம் கோடி மோசடி; நிதி நிறுவன இயக்குநர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

IFS scammed by claiming to give high interest. Financial institution

Advertisment

வேலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவன இயக்குநர்கள் 30 ஆயிரம் கோடி ரூபாய் பணமோசடி செய்ததாக வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மோசடியில் பங்கு பெற்ற சிலர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளிகளான அதன் நிறுவனர்கள் இதுவரை தலைமறைவாக உள்ளனர்.

இந்நிலையில் நிதி நிறுவன இயக்குநர் லட்சுமி நாராயணன் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், “இந்த ஆண்டுக்குள் அனைவரின் பிரச்சனைகளும்தீர்க்கப்படும். பிரச்சனையை தீர்க்க கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடினமாக முயற்சி செய்து வருகிறேன்.

அனைவரின் பிரச்சனையையும் சரி செய்ய ஒரு ஐடியா கிடைத்துள்ளது. நான் உங்களுடன் இருக்கிறேன். என்னை ஈ மெயில் ஐடி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்” என தெரிவித்து இறுதியில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல "விரைவில் தங்கள் பிரச்சனை தீர்க்கப்படும் என கடந்த 6 மாதங்களுக்கு முன்வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Vellore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe