Advertisment

‘இதெல்லாம் உனக்குப் புரிந்திருந்தால்..?’ -எச்.ராஜாவுக்கு பாடம் கற்பிக்கும் காக்கிகள்!

ambedkar

‘நான் அவன் இல்லை!’ பாணியில் எச்.ராஜா வழக்கமாகச் சொல்வதுதான் - “நான் பேசியதை எடிட் செய்துவிட்டார்கள். மெய்யபுரம் வீடியோவே பொய்.” என்று மறுத்திருக்கிறார். ஆனாலும், தமிழக காவல்துறையினர் கொதித்துப் போய் உள்ளனர்.

Advertisment

அம்பேத்கர் கே என்ற காவல்துறை அதிகாரி தன்னுடைய முகநூல் பக்கத்தில், ‘குஜராத் காவல் ஆய்வாளர் வாட்சப் மெசேஜ்’ என்று குறிப்பிட்டு, கீழ்க்கண்டவாறு பதிவிட்டிருக்கிறார்.

Advertisment

‘சரிய்யா உன் பேச்சுக்கே வர்ரோம் எல்லாமே கரெப்ட் போலிஸ்தான் என்ன டேஷ்க்கு துப்பாக்கி ஏந்திய போலிஸ் கேட்குற அவன் தான் கரெப்ட் ஆச்சே....

#எங்க கரெப்ட் போலிஸ் பாதுகாப்பு வேணாம்னு தனியா போய் பாரேன்..

போலிஸை தரக்குறைவா பேசிட்டு

துப்பாக்கி ஏந்திய போலிஸ் வேணும்னு கேட்கிற அனைத்து கரெப்ட் ஆளுங்களுக்குமான பதிவு இது.!’

ammer

அம்பேத்கரே இன்னொரு பதிவில், ‘ஒரு துப்பாக்கி.. ஒரு போலிஸ்.. ஆயிரம் போலிஸுக்கு சமம்னு உன்னை நினைக்க வச்சி, பக்கத்தில் உன் பாதுகாப்புக்கு நிற்கிறான் பார். நேர்மைன்னா என்ன? கடைமைன்னா என்ன? சகிபுத்தன்மைன்னா என்னன்னு அவன் பாடம் எடுத்துக்கிட்டு இருக்கான்யா உனக்கு. இதெல்லாம் புரிஞ்சிருந்தா நீ ஏன் இப்படி பேசப்போற ஷின்சான்.’ என்று எச்.ராஜாவுக்கு பாடமே நடத்தியிருக்கிறார்.

ampetkar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe