style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
வீரபாண்டிய கட்டபொம்மன் போல் கமல் மீசையை முறுக்கினால்அரசியலில் தூக்கிலிடப்படுவார் என்றுஅமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியிருப்பதுபெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அதிமுக பிரமுகரின் இல்ல விழாவில் கலந்துகொண்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வீரபாண்டிய கட்டபொம்மன் போல் கமலஹாசன் மீசையை முறுக்கி கொண்டு இருந்தால் அரசியலில் விரைவில்தூக்கிலிடப்படுவார். கமலஹாசன் கலாச்சாரம் விரைவில் முடிவுக்கு வரும் என கூறினார். இந்த கருத்து கமல் ஆதரவாளர்கள்மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.