Skip to main content

'பிரச்சாரக் கூட்டத்திற்கு சரக்கு வாகனத்தில் மக்களை கூட்டிவந்தால்...' - எச்சரிக்கை விடுத்த போக்குவரத்து ஆணையம்!

Published on 10/03/2021 | Edited on 10/03/2021

 

'If people gather for a campaign meeting in a truck ...' - Transport Commission warned!

 

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு பொதுமக்களை சரக்கு வாகனத்தில் அழைத்து வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு பொதுமக்களை சரக்கு வாகனத்தில் அழைத்து வந்தால் சம்மந்தப்பட்ட சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும். அதேபோல் வாகன உரிமையாளர், வாகன ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

24 மணி நேரத்தில் 3 பேர்; வெள்ளியங்கிரியில் தொடரும் மரணங்கள்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
 3 people lost their lives in 24 hours; the tragedy continues in the Velliangiri trek

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தை பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், தொடர்ந்து சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளியங்கிரி  மலை  மீது ஏற முயன்ற மூன்று பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (68) வயது. மருத்துவரான இவர் நேற்று நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். இன்று காலை நான்கு மணி அளவில் மலையில் ஏறிக்கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். இந்த மூன்று பேரின் சடலங்களையும் கீழே கொண்டு வரும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மணல் லாரிகளை எம்.எல்.ஏ மிரட்டுகிறார்; மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Truck Owners Association President alleges that MLA  threatening sand trucks

 

வேலூர் மாவட்டம் கந்தநேரியில் உள்ள அரசு மணல் கிடங்கில் இருக்கும் ஆற்று மணலை முறையாக ஆன்லைன் மூலம் பதிவு செய்து மணல் எடுக்க அனுமதிக்கப்பட்ட லாரிகளுக்கு 3 தினங்களுக்கு மேலாக மணல் கொடுக்காமல் காத்துக் கிடக்க வைத்துவிட்டு, மணல் எடுக்க பதிவு செய்யாத லாரிகளுக்கு இரவு பகலாக கள்ளத்தனமாக அரசு அதிகாரிகளின் துணையோடு, லோடு லோடாக மணல் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்து முறையாகப் பதிவு செய்த லாரிகளுக்கு மணல் வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பினர் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் மனு அளித்தனர்.

 

Truck Owners Association alleges that MLA  threatening sand trucks

 

அதன் பின்னர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் நிலவி வரும் ஆற்று மணல் தட்டுப்பாட்டை பயன்படுத்திக் கொண்டு வேலூர் கந்தனேரி மணல் குவாரியில் திமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரும், ஒன்றிய கவுன்சிலரும் சேர்ந்து உள்ளூர் ரவுடிகளை வைத்துக் கொண்டும் அரசு அதிகாரிகளோடு கைகோர்த்துக் கொண்டும், ஆன்லைன் மூலம் பதிவு செய்த லாரிகள் வாரக்கணக்கில் நின்று கொண்டிருக்க, இரவு நேரங்களில் சட்ட விரோதமாக அனுமதி பெறாத லாரிகளில் டன் கணக்கில் மணல் கடத்துகிறார்கள். 

 

ஆகவே இதுபோன்று அநீதி இழைப்பதை தடுத்து நிறுத்தி, ஆன்லைன் மூலம் பதிவு செய்து மணல் எடுக்க காத்துக் கொண்டிருக்கும் லாரிகளுக்கு காவல்துறை முன்னிலையில் மணல் வழங்கிட வேண்டும். அதேபோன்று மணல் கடத்தலில் ஈடுபடும் உள்ளூர் குண்டர்களுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் கிடங்கில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தனர்.