Advertisment

'பொது இடத்தில் குப்பை கொட்டினால்...' - களமிறங்கும் ஏ.ஐ

'If you throw garbage in a public place...' - The A.I

சென்னையில் பொது இடங்களில் விதிகளை மீறி குப்பையை கொட்டினால் அவற்றைக் கண்காணிக்க ஏஐ கேமரா பொருத்தப்படும் என சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

Advertisment

சென்னையில் பொது இடங்களில் அத்துமீறி குப்பைகள் கொட்டப்படுவது தொடர்பாக புகார்கள் எழுந்து வருகிறது. சென்னையில் சில இடங்களில் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும் குப்பைகள் பேருந்து வழித்தட சாலைகளிலும் நடைபாதைகளிலும் கிடப்பதால் போக்குவரத்து பாதிப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் சென்னையில் கடந்த 10 நாட்களில் விதிகளை மீறி குப்பை கொட்டியவர்களிடமிருந்து 17 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி, சட்டவிரோதமாகக் குப்பை கொட்டக்கூடிய இடங்களைக் கண்டறிந்து ஏஇ தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமரா விரைவில் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது.

சட்டவிரோதமாக குப்பை கொட்டுவோரை இதன் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சியின் ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இயங்கக்கூடிய ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துடன் இந்த கேமரா தொழில்நுட்பம்இணைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

instruction
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe