style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கர்நாடகா மேகதாதுவில்அணைக்கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்,
தமிழகத்தில் மழையேஇல்லை, தண்ணீரே இல்லாத நிலையில்புல்லே முளைக்கமுடியாத நிலையில் தமிழகத்தில் தாமரை மலரும் என்று எந்த முகத்தை வைத்துக்கொண்டு கூறுகிறார்கள் என பேசியிருந்தார்.
இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதிவிட்டுள்ள ட்விட்டில்''இனி மழை காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும் தாமரை மலரும். செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழை நீரை வைத்தாகிலும்தாமரை மலரச் செய்வோம். காவிப்படையின்இரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும் எனபதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து தற்போது ஸ்டாலின்பதிவிட்டுள்ள பதில் டூவிட்டர்பதிவில் ''சகோதரி தமிழிசைக்கு ஒரு தகவல்''
''தாமரை மலர சூரிய சக்தி தேவை! சூரியசக்தி நினைத்தால் தாமரையும் கருகும்'' என பதிவிட்டுள்ளார்.
சகோதரி தமிழிசைக்கு ஒரு தகவல்:
தாமரை மலர சூரிய சக்தி தேவை!
சூரிய சக்தி நினைத்தால் தாமரையும் கருகும்! https://t.co/R8xsJt96K0
— M.K.Stalin (@mkstalin) December 4, 2018
இனி மழை காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும் குளம் நிறையும் தாமரை மலரும்.செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தா கிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரை மலர செய்வோம் காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும் https://t.co/YTOvXRl30C
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) December 4, 2018