Advertisment

அப்பொழுதே "மைனரை" கட் செய்திருந்தால், பாலியல் வல்லுறவு, கொலை நடந்திருக்காது!!!

மூன்று வருடங்களாகவக்கிர புத்தி கொண்ட ஊர் மைனர் ஒருவன் பாலியல் சேஷ்டைகளில் ஈடுபட, "அபராதத்தை" மட்டும் விதித்து அவனைத் தப்பிக்க விட்டிருக்கின்றது ஆலமரத்து பஞ்சாயத்து. அப்பொழுதே அந்த "மைனரை" கட் செய்திருந்தால் இப்பொழுது வாய் பேச முடியாத, காது கேளாத சிறுமியை பாலியல் வல்லுறவாகி உயிரை இழந்திருக்கமாட்டாளே.!" என வாய்மூடி மௌனியாக சோகத்தில் இருக்கின்றது சிவகங்கை மாவட்டம் கீழசேவல்பட்டி அருகிலுள்ள அச்சரம்பட்டி கிராமம்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

செவ்வாய்க்கிழமையன்று நண்பகல் 1 மணி வேளையில், அக்கம் பக்கத்தார் குரல் கொடுக்க அரைகுறை நிர்வாணத்துடன், தலையிலிருந்து ரத்தம் ஓடி நின்ற நிலையில் குளிக்க சென்ற புதர் மறைவிலேயே பிணமாக கிடந்திருக்கின்றார் வாய் பேசமுடியாத 17 வயது சிறுமியான அழகுதேவி.

நூறு நாள் வேலைக்கு சென்ற அம்மா கருப்பாயிக்கும், விவசாய கூலிக்கு சென்ற அழகுவிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதோடு மட்டுமில்லாமல், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றியதோடு மட்டுமில்லாமல், உடற்கூறு ஆய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 If you had cut the

ராமநாதபுர சரக டி.ஐ.ஜி. காமினி, மாவட்டக் காவல்துறைக் சுண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் நேரில் ஆய்வினை நடத்த, டி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து சிறுமியை கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்து கொலையாளியை விரைந்து பிடிக்க உத்தரவிட்டனர்.

சிறிது நேரத்தில் மோப்ப நாய் லைக்கா வரவழைக்கப்பட கொலையாளி அருகிலுள்ள "மைனர்" மாணிக்கமே என உறுதி செய்யப்பட்டான். சரியாக இரவு 11 மணிக்கு கொலை நடந்த 12 மணி நேரத்திற்குள்ளேயே, கொலையாளியிடம் ஒப்புதல் வாக்குமூலத்தை வாங்கி அவனை கைது செய்தது சிவகங்கை மாவட்ட காவல்துறை.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

"சம்பவத்தினத்தன்று காலையிலேயே அழகாபுரி ஊருக்கு சென்று மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்தேன். அப்பொழுது இந்த சிறுமி குளிப்பதற்காக செல்ல, மதுபோதையில் இருந்த நான் அவரை பாலியல் வல்லுறவிற்கு ஆளாக்கிவிட்டேன். அலங்கோல ஆடைகளுடன் இருந்த அவர் எப்படியும் என்னை அடையாளம் காட்டிவிடுவார் என எண்ணி அருகிலிருந்த இரும்புக் கம்பிக் கொண்டு தலையில் அடித்துக் கொன்று விட்டேன்." என ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கிய கொலையாளி "மைனர்" மாணிக்கத்திற்கு கடந்த இரு வருடங்களுக்கு முன்புதிருமணம் நடந்து குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில் முன்பு இதே கிராமத்தில் இது போல் பாலியல் சீண்டல் செய்ய, ஊரில் பெரிய குடும்பம் என்பதால் ஆலமரத்து பஞ்சாயத்து அபராதம் மட்டும் "மைனரை" தப்பிக்கவிட்டது. "தப்பு செய்தான். அது தான் "மைனரை" சுட்டுட்டேன்." என திரைப்படத்தில் நடிகர் விவேக் செய்தது போல் அப்பொழுதே போலீஸிடம் இவனை ஒப்படைத்திருந்தால் அந்த சிறுமிக்கு இந்த நிலை வந்திருக்காது.!

police Sexual children sivagangai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe