Advertisment

''இந்த காணொளியை கண்ட பிறகும் மீண்டும் அதை செய்தீர்கள் என்றால்...''-டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை!

 '' If you go after watching this video ... '' - DGP Silenthrababu warning!

ஆன்லைன் சூதாட்டம், ஆன்லைன் ரம்மி போன்ற நிகழ்வுகளால் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அது குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை காவல்துறை அளித்து வருகிறது. அண்மையில் 'பிட்காயின் மோசடி' குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

Advertisment

இந்நிலையில், இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ''எல்லோருக்கும் வணக்கம். ஆன்லைன் ரம்மி என்ற பெயரில் இணையதளத்தில் மிகப்பெரிய மோசடி நடந்து கொண்டிருக்கிறது. ஆன்லைன் ரம்மி விளையாட வைத்து உங்களிடம் முதலில் அவர்களே அதிக பணத்தை கொடுத்து, அதன்பிறகு உங்களை முதலீடு செய்ய வைத்து பின்பு ஏமாற்றுவார்கள். முதலில் நீங்கள் விளையாடும் பொழுது நீங்கள் ஜெயித்தது போன்று பரிசு கிடைக்கும். அதன்பிறகு பெரிய தொகையைக் கொடுத்து விளையாடும்போது இன்னொரு முறை விளையாடினால் அதிக பணம் வரும் என்று திரும்ப திரும்ப விளையாடுவீர்கள். சில நேரத்தில் பணம் வருவது போன்று தெரியும். அதை நம்பி திரும்ப நீங்கள் இன்னும் முதலீடு செய்வீர்கள். ஆனால் முழுவதுமாக பணம் தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கும். இருக்கிற பணம், நகை விற்று அதன் மூலம் வரும் பணம் என பல லட்ச ரூபாயை இழந்தபிறகு பணமெல்லாம் போச்சே என நினைக்க வைக்கும்.

Advertisment

இது ஆன்லைன் ரம்மி கிடையாது ஆன்லைன் மோசடி. ஏற்கனவே அரசாங்கம் இதனைத் தடை செய்வதற்கான அரசாணை மற்றும் சட்டமியற்றி நீதிமன்றத்திற்கு சென்று தடை வாங்கியுள்ளது. பொதுமக்களாகிய நீங்கள் தயவுசெய்து ஆன்லைன் ரம்மி விளையாடுவதில் முதலீட்டைப் போடாதீர்கள். இதுபோன்ற விளம்பரங்களில் சினிமா நடிகர்கள் எல்லாம் கூட வருகிறார்கள் என்பதற்காக எல்லாம் ஆன்லைன் ரம்மி விளையாட போகாதீர்கள். இது உண்மையான ஆன்லைன் ரம்மி விளையாட்டு கிடையாது ஆன்லைன் ரம்மி மோசடி என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த காணொளியை கண்ட பிறகும் நீங்கள் விளையாட போனீர்கள் என்றால் மிகப்பெரிய தவறை செய்கிறீர்கள், மிகப்பெரிய பேராசை உங்களிடம் இருக்கிறது என்று அர்த்தம். வங்கி தருகின்ற வட்டி விகிதத்தை விட வேறு யாராலும் பெரிய வித்தியாசமான வட்டி வீதத்தை தர முடியாது. அவர்கள் பணத்தை உங்களுக்கு தர மாட்டார்கள், தர வேண்டிய அவசியமும் கிடையாது என்பதை புரிந்து கொண்டு ஆன்லைன் ரம்மி விளையாட்டை தயவுசெய்து கைவிடுங்கள். இதில் ஒரு பெரிய நஷ்டம் வந்திடும், அவமானம் ஏற்படும், குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படும், தற்கொலை செய்ய வேண்டிய சூழ்நிலை கூட வர வாய்ப்பிருக்கிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு வேண்டவே வேண்டாம்'' என்றார்.

awarness DGPsylendrababu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe