ADVERTISEMENT

முதல்வரை வரவேற்க வந்தால் தட்டு, துட்டு, சேலை!

11:55 PM Sep 09, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தில் செப்டம்பர் 9 ஆம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கவும், கரோனா பரவலை தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். இவரை திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் இருந்து அ.தி.மு.க.வினர் அழைத்து வந்தனர்.

கூட்டங்கள் முடிந்தபின்னர் திருவண்ணாமலை வேலூர் சாலை, பேருந்து நிலையம், அண்ணாசாலை, தேரடிவீதி, திருவூடல்தெரு வழியாக செங்கம் சாலையில் உள்ள சுற்றுலா மாளிகைக்குச் சென்றார் முதல்வர். இந்த வழிகளில் அந்தந்த பகுதி அ.தி.மு.க.வினர் தங்கள் பகுதி பெண்களைத் திரட்டி சாலைக்கு கொண்டு வந்து நிறுத்தினர்.

எடப்பாடி வருகிறார் எனச் சொன்னால் மக்கள் வரமறுத்ததால், முதல்வர் வருகிறார் வாங்க எனச் சொல்லி பெண்களிடம் நைசாகப் பேசியுள்ளனர். சும்மா மணி நேரம்தான், வந்து வரிசையில் நின்னிங்கன்னா புடவை தருகிறோம் எனச் சொல்லி அழைத்துள்ளனர். அப்படி வந்தவர்களுக்கு புடவை, தட்டு, 100 ரூபாய் பணம் எனத் தந்துள்ளனர். இதனால், முதல்வர் நகருக்குள் சென்ற பாதையில் பெண்கள் நின்று மலர்தூவி அவரை வரவேற்றனர்.

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT