Advertisment

“தாய்மார்களுக்கு 1000 ரூபாய் பிச்சை போட்டால்...” - குஷ்பு சர்ச்சை பேச்சு

publive-image

தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டால் தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்களா என குஷ்பு பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை செங்குன்றத்தில் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து இன்று (11.03.2024)ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க செயற்குழு உறுப்பினரும், தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு கலந்துகொண்டு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Advertisment

அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் எவ்வளவு போதைப்பொருள்கள் வந்துள்ளது. இந்த போதைப் பொருள்கள் ஒவ்வொரு இடத்திற்கும் செல்ல உள்ளது. இது குறித்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் டெல்லியில் உள்ள அதிகாரிகள் சொல்லியுள்ளனர். இதற்கு முதலமைச்சர் என்ன பதில் கொடுக்கப்போகிறார். இன்றைக்கு தாய்மார்களுக்கு 1000 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், பிச்சைப் போட்டால் தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்களா?” எனப் பேசினார். குஷ்புவின் இந்த பேச்சு பொதுமக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Khushbo
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe