சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட்டால் ஆபரண பெட்டி சபாிமலைக்கு வராது- பந்தள மன்னர் குடும்பம் கடிதம்!!

SAPARIMALAI

சபாிமலையில் பெண்களை அனுமதித்தால் பந்தளம் அரண்மனையில் உள்ள ஆபரண பெட்டியை சபாிமலைக்கு அனுமதிக்க மாட்டோம் என்று மன்னா் குடும்பம் அறிவித்து இருப்பது தேவசம் போா்டுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

சபாிமலையில் மகரவிளக்கின் போது முக்கிய நிகழ்வாக பந்தளம் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும் ஆபரணபெட்டியில் இருந்து நகைகளை அய்யப்பனுக்கு அனுவித்து பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை முடிந்ததும் மகர விளக்கு தென்படும். இதற்காக அந்த நாள் லட்ச கணக்கான பக்தா்கள் கூடுவாா்கள்.

இந்தநிலையில் சபாிமலையில் பெண்கள் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கும் நிலையில் இதற்கு எதிா்ப்பு தொிவித்து பந்தளம் ராஜகுடும்பத்தினா் கேரளா தேவசம் போா்டுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளது.

SAPARAIMALAI

அதில் சபாிமலையில் 18-ம் படி தாண்டி பெண்கள் செல்வாா்கள் என்றால் பந்தளம் அரண்மனையில் உள்ள ஆபரண பெட்டி சபாிமலைக்கு வராது. கோவில் வேண்டுமானால் அரசு சொத்தாக இருக்கலாம். அய்யப்பனுக்கு அணிவிக்கும் ஆபரணம் எங்கள் குடும்ப சொத்து அதை யாரும் கட்டாய படுத்த முடியாது. அதேபோல் பெண்கள் நுழையும்சபாிமலையில் மன்னா் குடும்பத்தினா் யாரும் வர மாட்டோம் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனா்.

இந்தநிலையில் உச்சநீதிமன்றம் தீா்ப்பை கட்டாயமாக்கினால் சபாிமலை தந்திாிகள் கூட்டாக பதவி விலகுவோம் என்று எச்சாித்துள்ளனா். இச்சம்பவங்கள் தேவசம் போா்டுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

Justice Dipak Misra Kerala saparimalai supremecourt tamil
இதையும் படியுங்கள்
Subscribe