Advertisment

''உதயநிதி அமைச்சர் பொறுப்புக்கு வந்தால் ஒட்டுமொத்த தமிழகத்திற்குமே பயன்'' - அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்து!

'' Udayanithi Minister will be useful for the whole of Tamil Nadu if he comes to power '' - Minister Anbil Mahesh comment!

தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டிற்குப் பயன்படும் அளவிற்கு அமைச்சராக வேண்டும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு அந்தப் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிவாரணப் பொருட்களை வழங்கினார். அப்போது விழா மேடையில் பேசிய அவர், ''விரைவில் 234 தொகுதிகளிலும் சொந்தம் கொண்டாடும் அளவிற்கு உயரிய பொறுப்புக்கு உதயநிதி ஸ்டாலின் வர வேண்டும்” என்றார்.

Advertisment

அந்த நிகழ்ச்சி முடிந்தபின் உடனே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,''உதயநிதி அமைச்சர் பொறுப்புக்கு வந்தால் ஒட்டுமொத்த தமிழகத்திற்குமே பயனுள்ளதாக இருப்பார். அந்தவகையில், ஒரு அமைச்சராக மட்டுமல்ல, அவரை சின்ன வயதிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கின்றேன் என்ற உற்ற நண்பனாகவும் சொல்கிறேன். அவருடைய ஜீன் அவருடைய தாத்தா, அவருடைய அப்பாவுடைய ஜீன். மக்களுக்காக உழைப்பது என்ற சின்சியாரிட்டி வரும்போது அடுத்தடுத்த கட்டத்திற்குப் போனால்தான் என்ன? என்னுடைய ஆசையை நாங்க வெளிப்படுத்தியுள்ளோம். பெரிய பொறுப்பு என்றால் அடுத்ததாக அமைச்சர் பதவிக்கு வர வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம்'' என்றார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

udhayanithi stalin minister anbil mahesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe