
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலிந்தோர் நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசும் போது,
பண்டிகைக் காலத்தில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றாலும் கூட மக்கள் முகக் கவசம் அணியாமல் சுற்றுவது வேதனையாக உள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் 3 -ஆம்தேதியில் இருந்து இன்றுவரை 27,400 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். மேலும், 12 ஆம்தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். அவசரமாக விண்ணப்பிக்கும் போது, ஏதேனும் தவறு செய்திருந்தால், பயப்படத் தேவையில்லை. மெயில் அனுப்பி அதனைத் திருத்திக் கொள்ளலாம். அதற்காகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, இணைக்கப்பட வேண்டிய சான்றுகள் தற்போது இல்லை என்றாலும் கவுன்சலிங் நடக்கும் போது சமர்ப்பிக்கலாம். அதனால் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றார்.
Follow Us