Advertisment

எஸ்.வி.சேகருக்கு சிறைக்குச் செல்ல ஆசையாக இருந்தால் அதனை அரசு நிறைவேற்றும் - அமைச்சர் ஜெயக்குமார்!

bhvh

Advertisment

அ.தி.மு.க. உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான். அ.தி.மு.க. கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் எனபெயர் மாற்றம் செய்யவேண்டும்என்று சில தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றில் எஸ்.வி.சேகர் கூறியிருந்தார்.

இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக பதிலடி தந்தார். இதனால் கோபமான எஸ்.வி. சேகர் மீண்டும் வீடியோவில் அதிரடியாகச் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அதில் நான் ஜெயலலிதா காலில் விழுந்தவன் அல்ல. அவர் சொந்தச் சகோதரனைப் போல என்னைப் பார்த்துக் கொண்டார். ஒருவேளை அவர் எம்.எல்.ஏ. சம்பளத்தை வாங்காதப்பான்னு சொல்லியிருந்தால் நான் வாங்கியிருக்கப் போவதில்லை. அதை நீங்க எப்படிச் சொல்ல முடியும். அவுங்களுக்கு முன்பு நீங்க, நான் எல்லோரும் ஒரே மாதிரிதான். இப்ப எப்படித் திடீர்ன்னு நீங்க ஒரு படி மேலே ஆயிட முடியும் என்று கோபமாகக் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் அவரின் தொடர் சர்ச்சையான பேச்சு தொடர்பாக பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் எஸ்.வி.சேகருக்கு சிறைக்குச் செல்ல வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாக இருந்தால் அதனை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றும் எனத் தெரிவித்துள்ளார்.

D JAYAKUMAR
இதையும் படியுங்கள்
Subscribe