Advertisment

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் மக்களுக்கு நல்லது: பொன்.ராதா பேட்டி

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று காலை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீட்டில் நடந்தது.

Advertisment

இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,

Advertisment

பிரதமரின் வருகை தொடர்பாகவும், துறைமுக திட்டம் குறித்தும் முதல்வரிடம் பேசினேன். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் மக்களுக்கு நல்லது தானே. என்னை பொருத்தவரையில் இரண்டர கலந்து என்பது தான் என்னுடைய நிலைப்பாடு.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து நான் பேசவில்லை. பயங்கரவாதிகள் கூடாரமாக தமிழகம் மாறிவருகிறது என்று தான் கூறினேன். அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பது குறித்து தமிழதக பாஜக முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

admk eps pon r
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe