தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா மற்றும் கஸ்தூரி இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதில் வனிதா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.

big boss

கடந்த இரண்டு சீசன்களை விட மூன்றாவது சீசனில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் மீது நிறைய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதே போல் சர்ச்சைகளும் நிறைந்து உள்ளன. குறிப்பாக மதுமிதா பிக் பாஸ் வீட்டிற்குள் தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பானது. மீரா மிதுன் மீது பண மோசடி வழக்கு மற்றும் வனிதா மீது குழந்தை கடத்தியதாக புகார் இப்படி நிறைய சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில், அடுத்த பிக் பாஸ் சீசனில் இருந்து கமல் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டார் என ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. மேலும் அடுத்த சீசனை சிம்பு தொகுத்து வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது பிக் பாஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கமல் தொகுத்து வழங்கும் அளவுக்கு சிம்புக்கு பக்குவம் இருக்காது என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கூறிவருகின்றனர்.

big boss

Advertisment

கடந்த இரண்டு சீசனை போல் இந்த சீசனில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல் வருவாரா அல்லது அரசியலில் கவனம் செலுத்துவரா என்று கேள்வி எழுந்தது. அதோடு நிகழ்ச்சியை நடிகர் சூர்யா அல்லது மாதவன் தொகுத்து வழங்குவர் என்று பரவியது. ஆனால் அனைத்து வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைப்பது போல் கமலே மூன்றாவது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி கமல் தொகுத்து வழங்குவது அந்த நிகழ்ச்சிக்கு ஒரு பலமாக சொல்லப்பட்டது. அதோடு நிறைய ரசிகர்கள் அந்த நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் அடுத்த சீசன் ஆரம்பிக்கும் போது சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் நடிகர் கமல் தொகுத்து வழங்குவது கேள்விக்குறியாகி உள்ளது என்றும் கூறிவருகின்றனர்.

அதனால் அடுத்த பிக் பாஸ் சீசனில் நடிகர் சிம்புவை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகிறது. பிக் பாஸ் மூன்றாவது சீசனே முடியாத நிலையில் அடுத்த சீசனில் சிம்பு தான் தொகுத்து வழங்குவார் என்று சமூக வலைத்தளங்களில் சிலர் வதந்தி பரவி விடுவதாக கூறுகின்றனர். இதன் அடிப்படையில் பார்த்தால் இந்த தகவல் பொய்யாக இருக்கவே அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், சமூகவலைதளங்களில் இந்த வதந்தி வேகமாய் பரவி வருகிறது.