Advertisment

செந்தில்பாலாஜி மீண்டும் ஜெயித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்! எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றிய கடைவீதியில் க.பரமத்தி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

Advertisment

 If Senthilpalaji again succeed, leave politics! mr vijayapaskar

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அப்போது அவர் பேசும் போது..

அ.தி.மு.க.ஒன்றரைகோடி உறுப்பினர்களை கொண்ட பெரிய கட்சி. இந்த இயக்கம் பல்வேறு சோதனைகளை கடந்து வந்துள்ளது. 32 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்த இயக்கம் அ.தி.மு.க. 18 எம்.எல்.ஏ.க்கள் மீதான நீதிமன்ற தீர்ப்பு ஆட்சியை கலைக்க வேண்டும் என திட்டமிட்டு இருந்த துரோகிகளுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. அரவக்குறிச்சி தொகுதிக்கு 85 வாக்குறுதிகள் நிறைவேற்ற வில்லை என்று செந்தில்பாலாஜி உண்ணாவிரதம் என்ற நாடகத்தை நடத்தினார். அவர் 5 ஆண்டுகள் அமைச்சராக இருந்தபோது இந்த அரவக்குறிச்சி தொகுதிக்கு என்ன செய்து கொடுத்தார் என பட்டியலிடமுடியுமா?. அவர் பொறுப்பில் இருக்கும் போது அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யாமல் தற்போது அரசியல் செய்வதற்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

Advertisment

இதற்கு முந்தைய சட்டமன்ற தேர்தலில் அரவாக்குறிச்சி தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரை தோற்கடிக்க யார் காரணம் என்று எல்லோருக்கும் தெரியும். எனக்கு எதிரா காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு வேலை பார்த்தது என்று யார் என்று எல்லோருக்கும் தெரியும். கட்சியை அழிக்க நினைத்தவர்களுக்கு ஜெ. ஆன்மா தக்க பதிலடி கொடுத்திருக்கிறது.

கடந்த 1991ம் ஆண்டு நடந்த சட்ட சபை தேர்தலில் அரவாக்குறிச்சியில் 249 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். இதற்காக ஓட்டு சீட்டு புத்தகம் வடிவில் வெளியிடப்பட்டது. அதில் இரட்டை இலை எங்கே இருக்கிறது என்று தேடி பார்த்து அ.தி.மு.க. வேட்பாளர் மரியம் அல்ஆசியாவைஓட்டு போட்டு வெற்றிபெற வைத்தார்கள்.

சட்டமன்ற இடைத்தேர்தலாகட்டும், பாராளுமன்ற தேர்தலாகட்டும் செந்தில்பாலாஜி அரவக்குறிச்சி தொகுதியாக இருக்கட்டும் அல்லது கரூர் தொகுதியாகட்டும் அதில் போட்டியிட்டு டெபாசிட் வாங்கட்டும் பார்க்கலாம் நான் அரசியலை விட்டு விலகுகிறேன். என்று பேசி தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்தார்.

இந்த கூட்டத்திற்கு கூட்டத்திற்கு க.பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் மார்க்கண்டேயன் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய துணை செயலாளர் குழந்தைசாமி, தெற்கு ஒன்றிய துணை செயலாளர் தென்னிலை சண்முகம், அவைத்தலைவர் வீராச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். க.பரமத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்.சரவணன் வரவேற்றார்.

mr vijayabaskar minister admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe