Skip to main content

18 எம்.எல்.ஏ.க்களின் தீர்ப்பு எங்களுக்கு சார்பாக வரவில்லை என்றால்?- தங்கத்தமிழ்ச்செல்வன் பகீர் பேட்டி!!

Published on 08/05/2018 | Edited on 08/05/2018


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளரான,  தங்கத்தமிழ்ச்செல்வன் தேனியில் செய்தியாளர்களை சந்தித்தார்,

தமிழகத்தின் நீட் தேர்வை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா உறுதியாக போராடி வந்தார். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்களான எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் மத்திய பா.ஜ.க.வின் அசைவிற்கு ஏற்றபடி நீட் தேர்வை கொண்டு வந்துவிட்டனர்.

தி.மு.க. உள்பட பல எதிர்க்கட்சிகள் நீட் தேர்வை வேண்டாம் என்று கூறிவந்த நிலையில் தற்போது அந்த தேர்வை நடத்த வேண்டும் என்று கூறும் அளவிற்கு அவர்கள் மனநிலையை பா.ஜ.க மாற்றிவிட்டன. நியுட்ரினோ உட்பட மக்களை பாதிக்கும் எந்த திட்டங்களையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

 

 



அதுபோல் 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு விவாகரத்தை அவசர மனுவாக விசாரிக்க மனு அளித்தோம். இதுவரை அதற்கு தீர்ப்பு வரவில்லை. தற்போது எங்களது 18 எம்.எல்.ஏ.க்களின் அலுவலகங்களுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. இதனால் தொகுதி மக்களுக்கு குடிநீர், சாலை, லைட் உள்பட அடிப்படை பிரச்சனையை கூட நிறைவேற்றி தர முடியவில்லை.

அவசர வழக்கை இவ்வளவு காலம் தாழ்த்துவது வேதனையாக உள்ளது. நீதிமன்றத்தில் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும். அவ்வாறு வராவிட்டால் நீதி இருக்கிறதா? என்ற சந்தேகம் ஏற்படும். ஒரு வருடமாக இந்த வழக்குக்காக நீதிமன்றத்தில் அழைந்து வருகிறோம். அப்படி இருந்தும் இன்னும் தீர்ப்பு வரவில்லை இந்த தீர்ப்பு ஒரு வேளை எங்களுக்கு பாதகமாக வந்தால் மீண்டும் நீதிமன்றத்தை நாடாமல் மக்களை சந்தித்து இடைத்தேர்தலில் போட்டி போடுவோம். அப்போது மக்கள் யாருக்கு ஆதரவாக உள்ளனர் என்று தெரிந்துவிடும் இவ்வாறு கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

எழுதிக் கொடுத்துவிட்டு இணைந்த தங்க தமிழ்ச்செல்வன்...(படங்கள்)

Published on 28/06/2019 | Edited on 28/06/2019

அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், முறைப்படி திமுகவின் உறுப்பினர் படிவத்தை பூர்த்திச்செய்து, தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். 

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்க.தமிழ்ச்செல்வன்,  ‘’தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே.   அதிமுகவை பிஜேபி இயக்கி வருவதால் தன்மானம் உள்ள என்னால் தன்மானத்தை இழந்து அதிமுகவில் இணைய விருப்பமில்லை’’என்று தெரிவித்தார்.   

Next Story

''நான் திமுகவுக்கு போவதாக சொல்வது வதந்தி'' – மறுக்கிறார் தங்க.தமிழ்ச்செல்வன்

Published on 30/01/2019 | Edited on 30/01/2019

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று ஜனவரி 30ந்தேதி அமமுக நிர்வாகிகளிடன் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு அவர் தங்கியுள்ள தனியார் ஹோட்டலுக்கு வருகை தந்த அமமுக கட்சியின் முக்கிய நிர்வாகியான தங்க.தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

thangatamilselvan interview

 

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தவர், நான் திமுகவுக்கு போவதாக வரும் தகவல் பொய்யானவை. என் தந்தை திமுகவில் இருந்தார். கலைஞர் – எம்.ஜி.ஆர் மோதல் வந்தபோது, ஒரு நடிகரின் பின்னால் போகக்கூடாது என பேசியபோது, என் தந்தை எம்.ஜி.ஆர் பின்னால் நின்றார். 4 முறை ஒன்றிய செயலாளராக இருந்தவர். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் அதிமுக உடைந்தபோது, ஜெயலலிதா பின்னால் செல்லவில்லை. அப்படிப்பட்ட நான் இப்போது காலத்தின் கோலத்தால் சின்னம்மா பின்னால் நிற்கிறேன், இரட்டை இலைக்காக வழக்கு தொடுத்துள்ளார் எங்கள் துணை பொதுச்செயலாளர், அதில் வெற்றி பெற்று இரட்டை இலையை பெறுவோம், என் சின்னம் என்றும் இரட்டை இலை தான் என்றார்.

 

 

தேர்தல் வந்தால் எல்லா கட்சியும் பிற கட்சியோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும், கூட்டணி அமைப்பதற்கான இறுதி நாளான்னு வரை கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும். அதனால் இப்போது யார், எந்த கூட்டணி என்று சொல்ல முடியாது.

 

 

திமுக தலைவர் நடத்தும் கிராமசபா கூட்டம் என்பது, அவர் கட்சியின் சார்பில் நடத்துகிறார், அது அவர்கள் பிரச்சனை. நான் டிவியில் பார்த்தவரை அந்த கூட்டம் இயல்பாக நடக்காமல் செயற்கை தனமாக உள்ளது.

 

 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜேக்டோ – ஜியோ அமைப்பினரை அழைத்து பேசி 9 கோரிக்கைகள் வைக்கிறார்களா 2வது நிறைவேற்ற வேண்டும், ஆசிரியர்கள், அதிகாரிகள் நினைத்தால் எதையும் சாதிப்பார்கள், அவர்கள் தான் வெற்றியை தீர்மானிப்பவர்கள். திமுக, கம்யூனிஸ்ட், அமமுக தான் போராட்டத்தை தூண்டிவிடுகிறார்கள் எனச்சொல்வது சரியல்ல. போராட்டத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவருக்கும் சுயஅறிவு உள்ளது, அவர்கள் தங்கள் உரிமைக்காக போராடுகிறார்கள்.

 

 

அமைச்சரவையில் ஊழல் நடக்கிறது என ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார் எனக்கேட்கிறிர்கள், உள்ளாட்சி துறை அமைச்சர் குடும்பம் தான் உள்ளாட்சிகளுக்கு அனுப்பப்படும் பிளீச்சிங் பவுடர் வாங்கி தருகிறது. அதில் பெரியளவில் ஊழல் நடந்து ள்ளது என்றார்.

 

 

தங்க தமிழ்ச்செல்வனின் பதில்கள் மாநிலத்தை ஆளும் அதிமுக அரசைக்கூட குத்துகிறது. ஆனால் திமுக தலைவர் பற்றிய கேள்விக்குயெல்லாம் சாப்டாகவே நழுவும் மீனாகவே பதில் தந்தார். இது அங்குயிருந்த அமமுகவினரையே குழப்பத்தில் ஆழ்த்தியது.