Advertisment

பின்னிருக்கை பயணியும் தலைக்கவசம் அணியாவிட்டால் வழக்கு, அபராதம்!

If the rear passenger does not wear a helmet, the case is fine!

Advertisment

விபத்துகளைக் குறைக்கும் விதமாக இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 1- ஆம் தேதி முதல் மே 15- ஆம் தேதி வரை நடந்த இரு சக்கர வாகன விபத்துகளில் சுமார் 95 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தலைக்கவசம் அணியாமல் பயணித்ததால், 80 வாகன ஓட்டிகளும், பின்னிருக்கை பயணிகள் 18 பேரும் உயிரிழந்துள்ளதாகப் புள்ளி விவரம் கூறுகிறது.

இதையடுத்து, இரு சக்கர வாகன ஓட்டிகளும், பின்னிருக்கைப் பயணிகளும் தலைக்கவசம் அணிவதைகண்காணிக்க சிறப்பு வாகன தணிக்கை நடத்த போக்குவரத்து காவல்துறைத் திட்டமிட்டுள்ளது. சென்னை முழுவதும் சுமார் 200 சோதனைச் சாவடிகள் அமைத்து, காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

Advertisment

பின்னிருக்கையில் அமர்ந்திருக்கும் பயணிகள் தலைக்கவசம் அணியவில்லை எனில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படவுள்ளது.

Chennai helmet bike
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe