Advertisment

'அனுமதி தரவில்லை எனில் பீப் பிரியாணியை இலவசமாக தருவோம்'-பிரியாணி திருவிழா சர்ச்சை!

 'If permission is not given, we will give Beep Biryani for free' - Biryani Festival Controversy!

Advertisment

வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகரில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மே 13, 14, 15 என மூன்று நாட்கள் ஆம்பூர் வர்த்தக மையத்தில் பிரியாணி திருவிழாநடக்கிறது.

ஆம்பூர் நகரில் மட்டும் சிறியதும், பெரியதுமாக சுமார் 100 பிரியாணி ஹோட்டல்கள் உள்ளன. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, நாட்டுக்கோழி பிரியாணி, மாட்டுக்கறி பிரியாணி, முயல் பிரியாணி விற்பனை செய்யப்படுகின்றன. இங்குள்ள 100 ஹோட்டல்களில் சரிபாதி மாட்டுக்கறி பிரியாணி ஹோட்டல்கள். மாவட்ட நிர்வாகம் நடத்தும் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி இல்லை என்பது உணவு பிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தலித் அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அமர் குஷ்வாவை நேரில் சந்தித்து மாட்டுக்கறி பிரியாணி சாப்பிடுபவர்கள் அதிகளவில் உள்ளனர். அதனால் அதனையும் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, ஒரு சமுதாய மக்கள் மாட்டுக்கறி பிரியாணியை விரும்பவில்லை. அவர்களையும் நான் பார்க்க வேண்டும் அதனால் அதற்கு அனுமதியில்லை எனச் சொன்னதாக தகவல்கள் வெளியாகின. இந்த செயலுக்கு பல அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Advertisment

அரசின் சார்பில் நடத்தப்படும் பிரியாணி திருவிழாவில், மாட்டுக்கறி பிரியாணிக்கு இடமில்லை எனச் சொல்லி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில்நாளை தொடங்கவிருக்கும்பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணியை அனுமதிக்காவிடில் இலவசமாக தருவோம் என கோரிக்கை வைத்த அமைப்புகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ambur briyani Festival
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe