Advertisment

"நானும் என் மகனும் சென்றால் அண்ணன்- தம்பி என்பார்கள்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Advertisment

தனது மகன் உதயநிதி ஸ்டாலினுடன் வெளியே சென்றால், தங்களை, அண்ணன், தம்பி என்பார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் நெரிசலான போக்குவரத்து உள்ள பகுதிகளில் வசிப்போரும், அவர்களது குழந்தைகளும் வெளியே விளையாடுவதை ஊக்குவிக்கும் வகையில், அண்ணாநகரில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நடத்தப்படுகிறது. காலை 09.00 மணி வரை ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

குறிப்பிட்ட சில பிரதான சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் விளையாடவும், உடற்பயிற்சி, சைக்கிளோட்டவும் அனுமதிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டு, பொதுமக்களோடு டேபிள் டென்னிஸ், இறகுபந்து உள்ளிட்டவற்றை விளையாடினார். பின்னர், முதலமைச்சர் சைக்கிளும் ஓட்டினார்.

Advertisment

அப்போது அங்கு கூடியிருந்த பலர் முதலமைச்சரோடு புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கரோனாவில் இருந்து தான் விரைவாகக் குணமடைந்ததற்கு தமது ஆரோக்கியமான உடல் நலனே காரணம். ஆரோக்கியமான உடல் நலனுக்கு உடற்பயிற்சி அவசியம். எனக்கு கிட்டத்தட்ட 70 வயது, ஆனால் நம்ப மாட்டீர்கள். நானும், எனது மகனும் வெளியே சென்றால் அண்ணன், தம்பி என்பார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் உடல் நலத்தைப் பேணிக் காப்பேன்" எனத் தெரிவித்தார்.

chief minister Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe