Advertisment

“எனது கண்டுபிடிப்பு பயன்பாட்டிற்கு வந்தால் அரசு செலவினைக் கட்டுக்குள் கொண்டு வர இயலும்” - விவசாயி நரசிம்மன்

publive-image

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டராதித்தம் மேட்டுத்தெரு கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் 1 கிலோ வோல்ட் மின்சாரத்தை 2.72 மடங்காக எளிய முறையில் மின்சாரம் தயாரிக்கும்விவசாயி நரசிம்மன் இயந்திரத்தைமின்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இது குறித்து அண்மையில் பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் சிவசங்கரிடம் தனது கண்டுபிடிப்பு மக்களுக்கும் அரசுக்கும் பல வகைகளில் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தனது கண்டுபிடிப்பை அரசுக்குத் தருவதற்குத் தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார் விவசாயி நரசிம்மன்.

Advertisment

இது குறித்து அவர் கூறுகையில், "தான் வாழும் கண்டராதித்தம் பஞ்சாயத்தில் தெருவிளக்கு மற்றும் குடிநீர் விநியோகத்திற்காக மட்டும் மின்பயன்பாட்டிற்காக மின்சார வாரியத்திற்கு 2 மாதத்திற்கு ஒரு முறை ரூ 1.5 இலட்சம் கட்டணமாகச் செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் எனது கண்டுபிடிப்பை அரசுப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தால் 3ல் இரண்டு மடங்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஆகும் செலவினைக் கட்டுக்குள் கொண்டு வர இயலும். இதனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளிடம் தமிழக அரசின் நிதிச்சுமையைக் குறைக்க செலவைக் குறைக்கும் வகையில் புதிய திட்டங்களைத் தருமாறு கேட்டுக் கொண்டார்.

Advertisment

அந்த வகையில் எனது எளிய முறையில் மின்சாரம் தயாரிக்கும் இயந்திரத்தை நடைமுறைப்படுத்தும்போது பெருமளவில் நிதிச்சுமையை உறுதியாகக் குறைக்க இயலும். எனது கண்டுபிடிப்பு நாட்டுடமையாக்கப்பட வேண்டும்" எனத் தமிழக அரசை கேட்டுக்கொண்டார்.திருமானூர் உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் விவசாயி நரசிம்மன் கண்டுபிடித்த மின்சாரம்தயாரிக்கும் இயந்திரத்தை ஆய்வு செய்தார். அதிகாரிகள் ஆய்வின் போது திருமழபாடி உதவி மின்பொறியாளர் பிரபாகரன் உடனிருந்தார்.

tneb Farmer Ariyalur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe