நாடு முழுவதும் கரோனாதடுப்பு நடவடிக்கை காரணமாக பின்பற்றப்பட்டு வரும் ஊரடங்கு உத்தரவு மே 17ஆம் தேதி வரைநீடிக்கும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இன்று புதிய உச்சமாகஇதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் ஒரே நாளில் 203பேருக்கு கரோனாஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,526 ஆக அதிகரித்துள்ளது.மேலும் சென்னையில் இன்று 176 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 144 தடை உத்தரவு முறைகளை எக்காரணத்தைக் கொண்டும் மீறாமல் மக்கள் நடந்து கொள்ள வேண்டும். பொது இடத்தில் ஐந்து பேருக்கு மேல் கூடினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.