நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் மதுரை, தேனி, திண்டுக்கல் எனத் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அடுத்த கட்டமாக கன்னியாகுமரி சென்ற கமல்ஹாசன், தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோனை மேற்கொண்டார். பின்னர் நிர்வாகிகளுக்கு மத்தியில் பேசிய கமல்ஹாசன்,
''பறக்கவேண்டும் என்றே ஒரு சின்னக்கொடி, அது பஞ்சம் இல்லையெனும் அன்னக் கொடி. அந்த அன்னக் கொடியை உயர்த்திப்பிடிக்க வந்த கட்சி மக்கள் நீதி மய்யம். அதைச் செய்யவேண்டும் என நினைத்தாலே எம்.ஜி.ஆரின் நீட்சிதான் நான். அதைச் செய்து காட்டிவிட்டால் அவரது ஆசிபெற்றுவந்த அவரின் அடுத்த வாரிசு நான்தான்''எனப் பேசினார்.