'Action will be taken against whoever receives bribe'- Minister M. Subramanian interview

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை ஒட்டி நேற்று தமிழக அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், 'மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் சென்னையில் நடைபெற்றது. தமிழக முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சி கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. தொடர்ச்சியாக தேசிய வாழ்வாதார சேவை மையம் நம்முடைய ஐடிசி ஹோட்டல் நிர்வாகத்தோடு ஒருங்கிணைந்து இப்பொழுது ஒரு நிகழ்ச்சியை நடத்தி முடித்திருக்கிறார்கள். ஐடிசி கிராண்ட் சோலா நிறுவனத்தில் 15 மாற்றுத்திறனாளிகள் பணியாற்றுவதற்குரிய வேலை வாய்ப்புக்கான ஆணைகள் வழங்கப்பட்டிருக்கிறது'' என்றார்.

Advertisment

அப்பொழுது செய்தியாளர்கள் அரசு மருத்துவமனையில் லஞ்சம் பெறுவது குறித்து புகார்கள் எழுவதாக கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், 'வருகின்ற நோயாளிகளிடமிருந்து, பொதுமக்களிடமிருந்து என யாரிடமிருந்து கையூட்டு பெற்றாலும் தவறு. கண்காணிப்புடன் இருக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றார்.

.