பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை ரத்த பரிசோதனை நிலையத்தின் அலட்சியத்தினால் மக்கள் பீதி

Advertisment


பட்டுக்கோட்டை பகுதியில் அதிக அளவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் கழுகபுலிக்காடு பகுதியை சேர்ந்த கார்த்தி என்ற இளைஞர் டெங்கு காய்ச்சல் பாதித்து உயிரிழந்தார். அதே போல அதிராம்பட்டிணம் பகுதியிலும் சிலர் இந்த ஜூரத்தினால் இறந்த நிலையில் தமிழக அரசினாலும் தொண்டு நிறுவனங்களினாலும் வழங்கப்பட்டு வரும் நிலவேம்பு கசாயத்தை குடிக்க மக்கள் வரிசையில் நின்று குடித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக ஜூரம் விட்டு விட்டு அடிப்பதால் கண்டியன் தெருவை சேர்ந்த சத்திவேல் என்பவர் இன்று காலை அரசு மருத்துவமணைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த மருத்துவர் ஜீவிதா என்பவர் சத்தியை பரிசோதித்துவிட்டு அரசு மருத்துவமணை ரத்த பரிசோதனை கூடத்தில் ரத்த பரிசோதனை செய்து வர சொல்லி ரசீது கொடுத்துள்ளார். அதனடிப்படையில் பரிசோதனை செய்த ஆய்வுக்கூட ஊழியர் அவருக்கு ரத்தத்தில் அணுக்களின் எண்ணிக்கை 94000 மட்டுமே இருப்பதாக பரிசோதனை முடிவினை ஒரு துண்டு பேப்பரில் எழுதி கொடுத்துள்ளார்.

அரசு ஆய்வு கூட பணியாளரின் செயல்பாட்டில் சந்தேகம் அடைந்த சத்தி, ரத்த அணுக்கள் குறைவாக இருப்பதாக கூறியதால் அச்சமுற்று தனியார் ரத்த பரிசோதனை நிலையத்தில் சென்று ரத்த மாதிரி கொடுத்து பரிசோதித்துள்ளார். அப்போது இரண்டு லட்சத்து மூவாயிரம் என்ற எண்ணிக்கையில் ரத்த அணுக்கள் இருப்பதால் அச்சப்பட தேவையில்லை என தனியார் ஆய்வுகூட பணியாளர்கள் கூறியுள்ளனர்.

பட்டுக்கோட்டையை பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் மருத்துவமணை மருத்துவர்களும் இருக்க மாட்டார்கள். இந்நிலையில் சத்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட மன உலைச்சளுக்கும் தவறான பரிசோதனை முடிவினை கண்டித்தும் அரசு மருத்துவமணை நிர்வாகத்தின் மீது வழக்கு தொடுக்க உள்ளதாக பாதிக்கப்பட்டவர் கூறினார்.

- இரா.பகத்சிங்