Advertisment

அதிமுக எம்.எல்.ஏ மரணத்தில் மர்மம்?

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் (64). இவரது வீடு சூலூர் அருகே உள்ள காம நாயக்கன் பாளையம் வி.மேட்டூர் சேர்மன் தோட்டத்தில் உள்ளது. கனகராஜ் எம்.எல்.ஏ. மார்ச் 21 ஆம் தேதி தனது வீட்டில் பத்திரிகை படித்து கொண்டு இருக்கும் போதே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் மரணம் அடைந்தார்.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக எம்.எல்.ஏ. கனகராஜ் மரணித்தால் மர்மம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ ஒன்று பரவிக்கொண்டு இருக்கிறது. அந்த வீடியோவில் பேசும் நபர் கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடையவில்லை என்றும் அவரது கட்சியினர் விஷம் மேலும் மதுவில் விஷம் வைத்து கொலை செய்துவிட்டனர் என்றும் கூறியுள்ளார்.

Advertisment

sulur mla

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மேலும் எம்.எல்.ஏ. இறப்பதற்கு முன் அவரது கட்சியின் நிர்வாகி ஒருவரது வீட்டில் மது அருந்ததியதாகவும் , அந்த மது அனுமதியில்லாத பாரில் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும் கூறியுள்ளார் . பின்பு அந்த மது விருந்தில் அந்த அதிமுக நிர்வாகி வீட்டிலேயே கனகராஜ் இறந்துவிட்டதாகவும் , அவரது உடலை பண்ணை வீட்டில் வைத்து விட்டு சென்றுவிட்டனர் என்றும் கூறியுள்ளார்.இந்த வீடியோ வெளியானதில் இருந்தே சூலூர் எம்.எல்.ஏ இறப்பில் என்ன நடந்தது என்ற சந்தேகம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

admk death KANAGARAJ MLA Mystery death sulur
இதையும் படியுங்கள்
Subscribe