கடந்த 30/05/2025 அன்று தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தமிழகம் மற்றும் புதுசேரியில்சட்டமன்ற தொகுதி அளவில் முதல் மூன்று மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களைபாராட்டும் விழா அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு பின்தவெகவின் தேர்தல் பரப்புரை மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்யிடம் கேஷுவலாக நடந்து கொண்டேகிண்டலாகப் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. அந்த காணொளியில், “பாஜகவின் முன்னாள் தலைவராவது 10 பேரைக் கூட வச்சிக்கிட்டு, தேர்தலில் போட்டியிட்டு 18 சதவீத ஓட்டு வாங்கினார். ஆனால் எடப்பாடியை நம்பி யாரும் கூட்டணிக்கு வர மாதிரி தெரியவில்லை” என ஒருமையில் சிரித்துக் கொண்டே பேசும் காட்சி வைரலானது.
இந்நிலையில் ஆதவ் அர்ஜுனா பேச்சை லாட்டரி மார்ட்டினின் மகன் கண்டித்துள்ளார். இதுகுறித்து லாட்டரி மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலைத்தள பதிவில், 'அதிமுக பொதுச்செயலாளர் குறித்த ஆதவ் அர்ஜுனாவின் அநாகரீக பேச்சை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆதவ் அர்ஜுனா தனது மனைவியின் பணத்தில் வாழ்பவர். அவருக்கு உழைத்து முன்னேறியவர்களின் வலி புரியாது. தவெக தலைவர் விஜய் உடனடியாக இந்த முட்டாளை கட்சியை விட்டு நீக்க வேண்டும்' என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.